ஆக்சிஜன் கொண்டு வரும் கப்பல்களுக்கு கட்டண தள்ளுபடி - மத்திய அரசு உத்தரவு

ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களைக் கொண்டுவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என துறைமுகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
x

ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களைக் கொண்டுவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என  துறைமுகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான பொருட்களைக் கொண்டு வரும் கப்பல்களுக்கு, துறைமுகங்களில் இடம் அளிக்க அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றைக் கொண்டு வரும் சரக்கு கப்பல்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தொடர்பான பொருட்களுடன், இதர சரக்குகளையும் கொண்டு வந்தால், சார்பு விகித அடிப்படையில் பொருட்களுக்குக்  கட்டண தள்ளுபடி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்குகளை விரைவில் கையாண்டு ஆக்சிஜன் தொடர்பான பொருட்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்