"அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

"அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்
x
"அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்" - கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 22 ஆயிரத்து 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்,  கொரோனாவை சமாளிக்க அரசு வலுவான நெறிமுறையை பின்பற்றுகிறது என தெரிவித்தார். மேலும், ஊரடங்கு விதிப்பது குறித்து பரிசீலிக்கவில்லை என தெரிவித்த அவர், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன் என தெரிவித்ததோடு, இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி இலவசமாக கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்தார். மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்