கேரளாவில் 20,000 நெருங்கிய கொரோனா பாதிப்பு - முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து இன்று உயரதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆவோசனை மேற்கொள்கிறார்.
கேரளாவில் 20,000 நெருங்கிய கொரோனா பாதிப்பு - முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை
x
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து இன்று உயரதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆவோசனை மேற்கொள்கிறார்.கேரள மாநிலத்தில் கொரரோனா தொற்று நேற்று 19,577 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாநிலத்தில் 12 லட்சத்து 72 ஆயிரத்து 645  பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது   ஒரு லட்சத்து 18, ஆயிரத்து 173 பேர் சிகிச்சையில் உள்ளனர். எர்ணாகுளத்தில்  மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ள நிலையில்,  இன்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரையும் பரிசோதனை செய்ய அம்மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது .இன்றும் நாளையும் 3  லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. கேரளாவில் நேற்று முதல் இரவு ஊரடங்கு இரவு 9 மணி முதல்  காலை 5 மணி  வரை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கொரோனா நிலைமையை மதிப்பிடுவதற்காக, முதலமைச்சர்  பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்