தேர்தல் நடத்தை விதி மீறல்: மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மம்தா பானர்ஜி, 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதி மீறல்: மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் உத்தரவு
x
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மேற்குவங்க முதலமைச்சர், மத அடிப்படையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் கடந்த 9ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி, மத அடிப்படையில் அவ்வாறு பேசவில்லை எனவும், மத நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான் அவ்வாறு பேசியதாகவும் விளக்கம் அளித்தார். மம்தா பானர்ஜியின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள தேர்தல் ஆணையம், மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர் 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது. நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை மம்தா பிரச்சாரம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்