குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
x

குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் படங்களை வைக்க கோரி கடலூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி  தொடர்ந்த வழக்கு,  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய சென்னை உயநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க கூறி, 1978-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.தலைவர்கள் படங்களோடு குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தலாம் என அரசாணை பிறபிக்கப்பட்டும், அவர்களது படங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மனுதாரர் கூறியிருந்தார்.இதற்கு விளக்கம் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், தேசிய தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க அனுமதித்து மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட்டதே தவிர கட்டாயம் வைக்க வேண்டுமென கூறவில்லை என்றார்.இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், அரசாணை கட்டாயப்படுத்தாத நிலையில் பிரதமர், குடியரசு தலைவர் படங்களை வைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்