சபரிமலை கோவில் நடை திறப்பு: நாளை மாலை 5 மணிக்கு நடை திறப்பு

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
சபரிமலை கோவில் நடை திறப்பு: நாளை மாலை 5 மணிக்கு நடை திறப்பு
x
நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடக்கிறது. மறுநாள் காலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு கோவிலில் வழக்கமான பூஜைகள் தொடங்குகிறது. கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். வரும் 14 ஆம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு கனி காணுதல் வைபவம் நடைபெறுகிறது. அன்று பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வழங்குவார்கள். தொடர்ந்து 18- ஆம் தேதி வரையில் சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. தினசரி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களுடன் வரும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆன்-லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மூலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கோட்டயம், திருவல்லா, செங்கன்னூர், கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர் ஆகிய இடங்களிலில் இருந்து கேரள அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்