மத்திய பிரதேசம் : சிறைக் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி

மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள மத்திய சிறையில், சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசம் : சிறைக் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள மத்திய சிறையில், சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

குஜராத் : கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
 
தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் ராஜ்கோட்டில் உள்ள ஒரு கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று இலவச உணவு வழங்கி வருகிறது. இது குறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், காலை உணவு முதல் இரவு உணவு வரை தாங்கள் வழங்கி வருவதாகவும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி விட்டு வீடுகளுக்கு சென்ற பிறகு சிரமப்படக் கூடாது என்பதற்காக இத்தொண்டை செய்து வருவதாகவும் கூறினர். 

ஆக்ராவில் சூடுபிடிக்கும் மண்பானை வியாபாரம்

கோடை காலம் துவங்கியுள்ளதை முன்னிட்டு ஆக்ராவில் மண்பானை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இது குறித்து மண்பானை வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், பொதுமக்கள் தற்பொழுது கொரொனா காலம் என்பதால் குளிர் சாதனப் பெட்டிகளை உபயோகிப்பதில் எச்சரிக்கையாய் இருப்பதாகவும், அதனால் இயற்கையாகவே குளிர்ச்சி அளிக்கக்கூடிய மண்பானைகளை அதிகம் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் கூறினார். 

ஆப்கான் விமானப்படை தாக்குதல் : 157 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் 157 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். கந்தகாரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் மற்றும் மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் இயக்கத்தின் முக்கிய கமாண்டர் சார்காதியும் கொல்லப்பட்டுள்ளார் என அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி : ஒருவாரம் முழு ஊரடங்கு

இந்தியா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் கொரோனா தொற்று இரண்டாம்நிலையாக வேகமாக பரவிவரும் நிலையில், வங்கதேசத்தில் ஒருவாரம் முழு ஊரடங்கை செயல்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. வங்கதேசத்தில் திங்கட்கிழமை முதல் அமலாகும் இந்த முழு ஊரடங்கு காரணமாக அலுவலகங்கள், கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டாக்காவில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். அந்நாட்டில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.

சீனா : ஒரே மரத்தில் இரு நிறத்தில் மலர்கள்

சீனாவின் குவாங்சி(Guangxi) மாகாணத்தில் உள்ள ஒர் காகித மரத்தில், இரு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குவது ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகள் பழமையான அந்த மரத்தில், வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் பூக்கள் பூத்துள்ளன. இயற்கையாக நடப்பட்ட மரத்தில் நடந்த இந்த அதிசயம், தோட்ட உரிமையாளரை பிரம்மிக்க வைத்துள்ளது.




Next Story

மேலும் செய்திகள்