மேற்குவங்க சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல் : "25% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்"

மேற்குவங்க சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 25 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மேற்குவங்க சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தல் : 25% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்
x
மேற்குவங்க சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 25 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அம்மாநிலத்தில், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளில், மொத்தம் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில்19 பேர் கோடீஸ்வரர்கள். அதாவது மொத்த வேட்பாளர்களில் 10% பேர் கோடீஸ்வரர்கள். 53 வேட்பாளர்கள் 25 முதல் 40 வயதுகுட்பட்டவர்கள். 109 வேட்பாளர்கள் 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள். 29 வேட்பாளர்கள், 61 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் ஆண்கள் 170 பேர் பெண்கள் 21 பேர். கல்வித் தகுதியை பொறுத்தவரை, 96 வேட்பாளர்கள்  5-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள். 92 வேட்பாளர்கள் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள். கிரிமினல் பின்னணியை பொறுத்தவரை, 48 வேட்பாளர்கள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதாவது மொத்த வேட்பாளர்களில் 25% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்