ரயில் நிலையங்கள் - பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய நெறிமுறைகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயில் நிலையங்கள் - பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய நெறிமுறைகள்
x
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரயில் நிலையங்கள்  உள்ள அனைத்து இடங்களிலும் சரியான மின்வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்படாத ரயில்நிலைய கட்டடங்களை இடிக்க வேண்டும் என்றும்,

அவ்வாறு, பயன்படுத்தப்படாத கட்டடங்களை இடிக்கும் வரை மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காத்திருப்பு அறைகளில் இரவு நேரத்தில் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை இல்லாத ரயில்வே ஊழியர்களை ரயில் நிலைய வளாகங்களில் அனுமதிக்க கூடாது என்றும்,

ரயில் நிலையங்களில் உள்ள வைபை வசதி மூலம் ஆபாச தளங்களை அணுகாதபடி, தடை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் மது அருந்துபவர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்கள் மீது முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்