கேரள சட்டமன்றத் தேர்தல்...களமிறங்கிய கார்ப்பரேட் அமைப்பு

கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் கார்ப்பரேட் அரசியல் அமைப்பு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
கேரள சட்டமன்றத் தேர்தல்...களமிறங்கிய கார்ப்பரேட் அமைப்பு
x
கேரள சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் கார்ப்பரேட் அரசியல் அமைப்பு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..... 

பாட்டாளி மக்களின் நலனை பிரதானமாக கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலுவாக இருக்கும் கேரளாவில் கார்ப்பரேட் அரசியல் அமைப்பா... என வியப்பாகதான் இருக்கும்.
  
ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் ஏற்கனவே 4 கிராம பஞ்சாயத்துக்களில் கார்ப்பரேட் அரசியல் அமைப்பு பிரதான அரசியல் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டது.

2013-ஆம் ஆண்டு எர்ணாகுளம் கிழக்கம்பலத்தில் தொழில் அதிபர் சாபு எம் ஜேக்கப்பால் தொடங்கப்பட்டது டுவென்டி டுவென்டி அமைப்பு. 

அலுமினிய பாத்திரங்கள் மற்றும் ஆயுத்த ஆடைகளை தயாரிக்கும் குழுமத்தின் சமூக பொறுப்புகளை நிறைவேற்றும் அமைப்பாக இது தொடங்கப்பட்டது.

2015-ஆம் ஆண்டில் கிழக்கம்பலம் பஞ்சாயத்து தேர்தலில் களமிறங்கிய இந்த அமைப்பு, 19 இடங்களில் 17  இடங்களை வென்று நிர்வாகத்தை கைப்பற்றியது. 

இதனையடுத்து ஜேக்கப் பஞ்சாயத்தில் கோடிக்கணக்கில் செலவிட்டு, சாலை, குடிநீர் வசதிகள், ஏழைகளுக்கு வீடுகள், மருத்துவமனைகள் சீரமைப்பு மற்றும் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தினார்

Next Story

மேலும் செய்திகள்