மம்தா, சுவேந்து அதிகாரி ஒரே தொகுதியில் களமிறங்கி உள்ளனர்

மேற்குவங்க தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கி உள்ளது.
மம்தா, சுவேந்து அதிகாரி ஒரே தொகுதியில் களமிறங்கி உள்ளனர்
x
மேற்குவங்க தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கி உள்ளது. 

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மொத்தமுள்ள 294 தொகுதியில் 291 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில், பாஜக சார்பில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடும் 57 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ள நிலையில், அண்மையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியை பாஜக களம் இறக்கி உள்ளது போட்டி கடுமையாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்