பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது
x
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிரேசில், அமெரிக்காவிற்கு சொந்தமான செயற்கைக்கோள்கள் உள்பட 19 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றி வந்தனர். ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் உடன் செயற்கைக்கோள்களை பொருத்திய விஞ்ஞானிகள், தொடர்ச்சியாக கண்காணித்தனர். ராக்கெட்டை அனுப்புவதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும், ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்டன் தொடங்கப்பட்டது. 25 மணி 30 நிமிட கவுண்டன் முடிந்ததும் திட்டமிட்டப்படி இன்று காலை ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. விண்ணில் தீப்பிழம்பை கக்கியப்படி 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்