பல கவிஞர்களின் தாய்வீடு புதுச்சேரி - பிரதமர் நரேந்திர மோடி

புதுச்சேரி மக்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உதவ உறுதி அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.
x
புதுச்சேரி மக்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உதவ உறுதி அளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். 

புதுச்சேரிக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருப்பதாக தெரிவித்தார்.

புதுச்சேரி மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 
நாட்டின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம்​ என்றார்.

கடற்கரைதான் புதுச்சேரியின் உயிர் நாடி என்று கூறிய பிரதமர், சாகர்மாலா திட்டம் சென்னை, புதுச்சேரி இடையே கடல்வழி போக்குவரத்தை ஏற்படுத்தும் என்றார்.

இதேபோல், கிராமப்புறங்களையும், கடலோர பகுதிகளையும் இணைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மோடி கூறினார்.

தனது உரையின்போது, "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய மோடி, கல்வியைவிட உலகில் மிகச் சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை என்றார். 

மேலும், புதுச்சேரி, மக்கள் மிகவும் திறமைசாலிகள் என்றும், மாநில வளர்ச்சிக்கு உதவ உறுதி அளிப்பதாகவும் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்