தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது - பிரதமர் மோடி

தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது - பிரதமர் மோடி
x
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 6 வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழகம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடி உரையாற்றிய போது, கொரோனா காலத்தில் மத்திய அரசும், மாநில அரசுக்களும் இணைந்து செயல்பட்டதால் வெற்றிக் கண்டோம் எனக் கூறினார். கூட்டுறவு கூட்டாட்சிவாதத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக்குவதோடு, மாநிலங்களுக்கு இடையே மட்டுமின்றி மாவட்டங்களில் கூட்டுறவு கூட்டாட்சி முறை கொண்டு வர முயற்சிப்போம் என்று பேசினார். அனைத்து ஏழை மக்களுக்கும் வீடு வழங்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாக கூறிய அவர், தற்போது வரை 2 .4 கோடி வீடுகள் நாட்டில் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன எனக்கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் சுயசார்பு இந்தியா திட்டம் உலகத்திற்கே உதவியாக இருக்க போகிறது என்றார். மேலும், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு நாம் பெரும் உதவி செய்ய வேண்டும் என்றும்  நமது உற்பத்தித் திறனை அதிகரிக்க இதுவே மிகச் சிறந்த தருணம் என்றும் கூறினார். வங்கி கணக்கு திறப்பு, சுகாதார வசதிகள், இலவச மின்சார, எரிவாயு இணைப்பு ஏழைகளில் வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தை உருவாக்கி உள்ளன என்றும் கூறினார். மேலும் பேசுகையில் இளைஞர்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்