கேரள சட்டமன்ற தேர்தல் : "கொரோனா அச்சம் - கூடுதல் கட்டுப்பாடு" - தலைமை தேர்தல் ஆணையர்

கேரள சட்டமன்ற தேர்தலின் போது, கொரோனாவை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
கேரள சட்டமன்ற தேர்தல் : கொரோனா அச்சம் - கூடுதல் கட்டுப்பாடு - தலைமை தேர்தல் ஆணையர்
x
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், கேரள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, அங்கு இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுனில் அரோரா, கேரளாவில் பிரச்சனைக்குரிய பட்டியலில் உள்ள மூன்று மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், கேரளாவில் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 500 முதல் 1000 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தலுடன் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, ஏப்ரல் இரண்டாவது வாரமே, சட்டமன்ற தேர்தலை நடத்த கேரள அரசு, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்