உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி - என்ன சிறப்பு?

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ராணுவ பீரங்கியை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி - என்ன சிறப்பு?
x
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ராணுவ பீரங்கியை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வாகனத்தின் சிறப்பம்சம் என்ன? விரிவாக காணலாம்

மேக் இன் இந்தியா திட்டத்தை முன் நிறுத்தி வரும் மத்திய அரசு, தற்போது உள்நாட்டிலேயே அதிநவீன பீரங்கி வாகனங்களை தயாரித்துள்ளது.

சென்னை ஆவடியில் உள்ள கன ஊர்தி தொழிற்சாலையில் 8,400 கோடி ரூபாய் மதிப்பில் அர்ஜூன் நவீன பீரங்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்துடன் இணைந்து அர்ஜுன் மார்க் ஒன் ஏ ரக பீரங்கியை டி.ஆர்.டி. ஓ உருவாக்கியுள்ளது.

அதை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது 118 வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன அர்ஜுன் பீரங்கிகளை சென்னையில் பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

ஏற்கனவே 124 அர்ஜுன் பீரங்கிகள் எல்லையில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதல் சிறப்புடன் 118 வாகனங்கள் ராணுவத்தில் இணைகின்றன.

ஒவ்வொரு பீரங்கியும் சுமார் 59 டன் எடையுடன் 10 புள்ளி 638 மீட்டர் நீளம், 9.456 மீட்டர் உயரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன

1,400 குதிரை சக்தி திறனுடன் பீரங்கி இயங்கும் வகையில் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

120 மீ.மீ துப்பாக்கியுடன் இயங்கும் இந்த பீரங்கி, எந்த நேரத்திலும், எந்த தட்ப வெப்பத்திலும் எதிரிகளை தாக்கும் ஆற்றல் பெற்றது.

இரவு நேரத்திலும் துல்லியமாக இலக்குகளை அறியும் வகையில் Thermal imaging என்ற பிரத்யேக வசதி உள்ளது

இயல்பான இடங்களில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்திலும், கடுமையான நிலப்பரப்பில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பீரங்கி இயங்கும்

தரை மற்றும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க இரண்டாம் நிலை ஆயுதங்களாக, 7.62 மில்லி மீட்டர் மற்றும் 12.7 மிமீ உயர் ரக துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன. 

கமான்டர், சுடுநர் உட்பட 4 வீரர்கள் கொண்டு குழுவுடன் பீரங்கியை இயக்கலாம்

1970களில் இந்த வகை பீரங்கிகள் உருவாக்கப்பட்ட போது டி.ஆர்.டி. ஓ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. 

ஆனால் பலகட்ட ஆய்வுகள், பலதரப்பினரின் ஆலோசனைகளுக்கு பிறகு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பீரங்கிகள், தற்போது இருக்கும் பீரங்கிகளைவிட சக்தி வாய்ந்த மற்றும் அதிநவீன பீரங்கிகள் என டி.ஆர்.டி.ஓ பெருமிதம் கொள்கிறது.

Next Story

மேலும் செய்திகள்