குண்டு வீசும் குட்டி விமானங்கள் தயாரிப்பு - 250 கிலோ ஏவுகணையுடன் தாக்குதல்
பதிவு : பிப்ரவரி 07, 2021, 09:49 AM
எதிரிநாட்டு எல்லைக்குள் குண்டு வீசும் குட்டி விமானங்களை தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்.
எதிரிநாட்டு எல்லைக்குள் குண்டு வீசும் குட்டி விமானங்களை தயாரிப்பதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்.

ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சியின் போது சிஏடிஎஸ் வாரியர், சிஏடிஎஸ் ஹண்டர் மற்றும் சிஏடிஎஸ் ஆல்பா ஆகிய 3 ஆளில்லா குட்டி விமானங்கள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன.

எதிரிநாட்டு ரேடார் கட்டுப்பாட்டை உடைத்து எல்லைக்குள் ஊடுருவி சென்று ஏவுகணைகள், குண்டுகளை வீசும் வகையில்  இந்த குட்டி விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் உருவாக்கி வருகிறது.
  
400 கோடி ரூபாய் ஆரம்ப முதலீட்டில் குட்டி விமானங்களை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது என்றும், இவை 2024-25க்குள் பயன்பாட்டிற்குள் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த வகையிலான குட்டி விமானங்கள் தாய் போர் விமானத்துடன் பொருத்தப்பட்டு இருக்கும். எல்லையில் நின்றுக்கொண்டு போர் விமானம் இவற்றை விடுவிக்கும் போது, நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இவற்றௌ இயக்கும் கட்டுப்பாடு தாய் விமானத்திடம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானத்துடன் பொருத்தப்படும் வாரியர் குட்டி விமானங்களால் எதிரிநாட்டுக்குள் ஊடுருவி 750 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை தாக்க முடியும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் இயக்குநர் அருப் சாட்டர்ஜி கூறியுள்ளார்.  

இதனால் 250 கிலோ அளவிலான வெடிகுண்டுகள், ஏவுகணைகளை எதிரிநாட்டுக்குள் வீசிவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வரமுடியும் என்றும் தேஜஸ், ஜாகுவார், சுகோய் போர் விமானங்களில் இவற்றை பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   

ஹண்டர் குட்டி விமானங்கள் ஒரு ஏவுகணையாகவே செயல்படும் வகையில் உருவாக்கப்படுகிறது எனவும் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறனை கொண்டிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவற்றை பாதுகாப்பான தொலைவில் நின்று தேஜாஸ், ஜாகுவார் மற்றும் சுகோய் 30 எம்.கே.ஐ. விமானங்களில் இருந்து விடுவிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

இதுபோன்று ஆல்பா குட்டி விமானங்களால் ஒரே நேரத்தில் 24 டிரோன்களை விடுவிக்க முடியும் என்றும் இதில் ஒவ்வொரு டிரோன்களும்  இலக்கின் மீது 5 கிலோ எடையிலான வெடிகுண்டுகளை வீசும் திறனை கொண்டிருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே எதிரிநாட்டுக்குள் பிரவேசிக்கும் விமானங்களை காக்கும் வகையிலான நேத்ரா உளவு விமானத்தை இஸ்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் தயாரித்து வெற்றி கண்டுள்ளது. இந்த விமானம் விமானப்படையில் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று இந்திய  விமானப்படையின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் இந்த குட்டி விமானங்களும் திட்டமிட்டப்படி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

454 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

84 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

77 views

பிற செய்திகள்

தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மார்ச் 9-ம் தேதி விசாரணை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

125 views

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் - பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியீடு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

22 views

என்.ஆர்.காங்கிரசின் முடிவு என்ன?

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் காத்திருக்கின்றன.

32 views

சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் குறித்து அனைவரும் உணர்ந்துள்ளனர் - பிரதமர் மோடி

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஸ்வீடன் நாட்டுடன் இந்தியா இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12 views

எஸ்எப்டிஆர் தொழில்நுட்ப ஏவுகணை - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில், புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

26 views

"கார்களில் ஏர்-பேக் கட்டாயம்" - மத்திய அரசு அறிவிப்பு

கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.