7.5% இட ஒதுக்கீடு- உயர்நீதிமன்றம் விளக்கம்

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவருக்கு சேர்க்கை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
7.5% இட ஒதுக்கீடு- உயர்நீதிமன்றம் விளக்கம்
x
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசு பள்ளி  மாணவருக்கு சேர்க்கை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வழங்கப்படும் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்கக் கோரி புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த  மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, புதுச்சேரியில் படித்த மாணவருக்கு அரசாணையை நீட்டித்து வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மாநில எல்லையில் வசித்து, எல்லைக்கு உட்பட்ட பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம்  இயற்றப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்தமுடியாது என நீதிபதிகள் தெரவித்தனர்.மேலும் மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்தினால் எல்லையில் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களும் இதே கோரிக்கையை முன்வைப்பர் என கூறி மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்