"டிராக்டர் பேரணிக்கான அனுமதி :டெல்லி காவல்துறைக்கே அதிகாரம்" - உச்சநீதிமன்றம்

குடியரசு தினத்தன்று நடத்தப்படும், டிராக்டர் பேரணியை அனுமதிக்க டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் என்றும், இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டிராக்டர் பேரணிக்கான அனுமதி :டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் - உச்சநீதிமன்றம்
x
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட உள்ள டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்த போது,  ஒரு போராட்டத்தை அனுமதிப்பதும் அனுமதி மறுப்பதும் காவல்துறையின் வேலை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.இது குறித்து முடிவெடுக்க வேண்டியவர்கள், காவல்துறையினர் தான் என்றும்,இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை எனவும் உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.எத்தகைய போராட்டமாக இருந்தாலும் அது அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து கூறினர். டிராக்டர் பேரணி அமைதியாக நடத்தி முடிக்கப்படும் என, விவசாய சங்கங்கள் தெரிவித்த வார்த்தையை நம்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இனிமேல் முடிவெடுக்க வேண்டியது டெல்லி காவல்துறை தான் என கூறி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்