சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்

குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்
x
குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அறக்கட்டளையின் தலைவராக இருந்த கேசுபாய் பட்டேல் காலமானதை தொடர்ந்து, நேற்று புதிய தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியை, அறக்கட்டளையின் தலைவராக, அதன் உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர். பிரதமர் மோடியை தேர்வு செய்தது மூலம், சோமநாதர் ஆலயம் மேன்மேலும் வளர்ச்சி அடையும், கலாச்சார பாரம்பரியம் மிக்க இந்த ஆலயத்தின் உடனான உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களின் உறவு பலப்பட பிரதமர் மோடியின் தலைமை சரியானதாக இருக்கும் என அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மொராஜி தேசாய்க்கு அடுத்து இந்திய பிரதமர் ஒருவர் இந்த அறக்கட்டளைக்கு தலைவராக பொறுப்பேற்க உள்ளது இது இரண்டாவது முறை என கூறப்படுகிறது. தலைவராக தேர்வாகி உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடியின் தலைமை நிச்சயம் சோமநாதர் ஆலயத்தின் தனிச்சிறப்பை அதிகரிப்பதுடன், அதனை மேன்மேலும் மேன்மைபடுத்த உதவும் என தமது பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்