ரகசிய திருமணம் செய்ததால் ஆத்திரம் - காதல் கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி

ஆந்திராவில் ரகசிய திருமணம் செய்து விட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளாரோ என்ற சந்தேகத்தில் கணவனை மனைவியே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரகசிய திருமணம் செய்ததால் ஆத்திரம் - காதல் கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி
x
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மலக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பவானி. 

இவர் தாலப்புடி கிராமத்தை சேர்ந்த தத்தாஜி என்பவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே பவானியை ஒரு மாதத்திற்கு முன்பாக சினிமா பாணியில் ரகசியமாக திருமணம் செய்துள்ளார் தத்தாஜி. 

தாலி கட்டிக் கொண்ட பவானி தன் வீட்டிற்கு சென்றதால் இவர்களின் திருமணமும் ரகசியமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் தத்தாஜியை சந்திக்கும் போதெல்லாம் ஊரறிய தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பவானி வற்புறுத்தி வந்துள்ளார். 

ஆனால் தத்தாஜி அதை தட்டிக் கழித்து வரவே, காதல் மனைவிக்கு சந்தேகம் வந்துள்ளது. ஒருவேளை வேறு ஒரு பெண்ணுடன் தத்தாஜிக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருந்துள்ளது. இதனிடையே தத்தாஜியை சந்திக்க வேண்டும் என கூறி அவரை தன் ஊருக்கு வரவைத்துள்ளார் பவானி. 

இருவரும் பல இடங்களுக்கு பைக்கில் ஊர் சுற்றிய நிலையில் பவானியை மீண்டும் அவர் வீட்டில் விடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார் தத்தாஜி. அப்போது பைக்கின் பின்னால் இருந்த பவானி, தான் வைத்திருந்த கத்தியால் தத்தாஜியின் முதுகில் குத்தினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் மீது பல இடங்களிலும் கொடூரமாக கத்தியால் குத்தினார் அவர். 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து தத்தாஜியின் தாய்க்கு போன் செய்த பவானி, உங்கள் மகனை கொன்றுவிட்டேன், உடலை வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். 

இதனால் அதிர்ந்து போன அவர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தத்தாஜியின் பெற்றோர் மகனின் சடலத்தை கண்டு கதறி அழுதனர்... 

பவானி மற்றும் அவரது பெற்றோர் தங்கள் மகனை அடிக்கடி மிரட்டியதுடன், கொலை செய்து விடுவோம் என அடிக்கடி கூறி வந்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர் மகனை இழந்து நிற்கும் தத்தாஜியின் பெற்றோர். 
இதனிடையே சந்தேகத்தில் கணவரையே கத்தியால் குத்திக்கொன்ற பவானியை போலீசார் கைது செய்தனர்.

ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்த பெண், திடீரென காதல் கணவனை கொடூரமாக கொன்றிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்