கோவிஷீல்டுக்கு மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகாரம்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தீவிரமாக போராடி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில், கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்து சோதனை,வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பு மருந்தை 130 கோடி மக்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தை இந்தியா எதிர் கொண்டுள்ளது.
கோவிஷீல்டுக்கு மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகாரம்
x
கொரோனாவிற்கு எதிராக முதல் கட்டமாக, சுமார் 50 கோடி டோஸ் தடுப்பூசிகளைப் பெற்று பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. 

ஜூலை மாதத்துக்குள் 25 கோடி மக்கள் வரை, நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு, முதல் முறையாக தடுப்பு மருந்து கொடுப்பது உட்பட, 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுப்பது என்பது, இதுவரை இதற்கு முன் செய்யப்படாத மிகப் பெரிய செயல்முறை என  கூறுகிறார்கள் நிபுணர்கள். 

இந்தியாவில் சுமார் 27,000 குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்புக் கிடக்குகள் உள்ளன.  அங்கு இருந்து தான் தடுப்பூசிகள் மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். 

கிட்டத்தட்ட அனைத்து தடுப்பூசிகளும் 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸுக்குள், குளிர்சாதன வசதி கொண்ட குடோன்களின் வழியாகத் தான் கொண்டு செல்ல வேண்டும். 

Next Story

மேலும் செய்திகள்