பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் - இஸ்ரோ

பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட தகவல்தொடர்பு செயற்கைகோள் வருகிற ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் - இஸ்ரோ
x
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீ‌‌ஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 17-ஆம் தேதி,  பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம்,  சி.எம்.எஸ்- ஒன் என்ற தகவல்தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் விஞ்ஞானிகள் நிலைநிறுத்தினர். மேலும் புவிசார் சுற்றுப்பாதையில் அதை நிலை நிறுத்துவதற்காக, சுற்றுப்பாதை உயர்த்தும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக பேசிய விஞ்ஞானிகள், தகவல்தொடர்பு தரவுகளை பெறுவதற்கான ஆரம்பகட்ட செயல்பாடுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். வரும் ஜனவரி முதல் வாரத்தில், செயற்கைகோள் சுற்றுப்பாதைக்கான சோதனைகள் முடிந்ததும் தகவல்தொடர்பு சேவை பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்