தேசிய, பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் யோகாசனம் சேர்ப்பு - மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

யோகாசனத்தை தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் சேர்த்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய, பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் யோகாசனம் சேர்ப்பு - மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு
x
தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் யோகா சேர்க்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். கேலோ இந்தியா போட்டியிலும், யோகாவை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.யோகாசனம் மிக அழகான, கவர்ச்சிகரமான மற்றும் பிரபலமான விளையாட்டாக மாறும் என்றும், ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதே விளையாட்டின் நோக்கம் என்றும் ரிஜிஜு தெரிவித்தார்.இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யோகாசன விளையாட்டின் மூலம் 51 பதக்கங்கள் வரவாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் முன்மொழியப்பட்ட பாரம்பரிய, தனிநபர், ஜோடி, குழு, கலை யோகாசனம் ஆகியன சாம்பியன்ஷிப் மற்றும் அணி சாம்பியன்ஷிப் பிரிவு போட்டிகளாக நடத்தப்பட உள்ளன.2021ஆம் ஆண்டு தொடக்கத்தில், தேசிய யோகாசன போட்டி தொடக்கத்தில் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்