புதிய தொழில் நுட்பங்களை அங்கீகரிக்க வேண்டும்" - ஜி.20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை

மனித குல மேம்பாட்டுக்கு உதவுவது அடிப்படையில் தொழில் நுட்பங்களை அங்கீகரிக்க வேண்டும் எனபிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
புதிய தொழில் நுட்பங்களை அங்கீகரிக்க வேண்டும் - ஜி.20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை
x
சவூதி அரேபியா இந்தாண்டு ஏற்பாடு செய்திருந்த ஜி.20 நாடுகளின் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று  பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் கொரோனா பேரிடரால் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து, உலக நாடுகள் விரைந்து மீள முடியும் என பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது சுட்டிக்காட்டி உள்ளார்.  ஜி.20 நாடுகள் மாநாடு தொடர்பாக பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்ததாக தெரிவித்துள்ளார். திறமை, தொழில் நுட்பம், வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் ஒரு புதிய உலகளாவிய குறியீட்டை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளதை முன்வைத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பன்முக திறன் மற்றும் மீள்திறனை உள்ளடக்கிய தொழிலாளர்களை இனம் கண்டு அவர்களை ஒருங்கிணைக்கும்  நிலையில் தொழிலாளர்கள் கண்ணியம் மற்றும் திறன் அதிகரிக்கும் எனவும், மனித குல மேம்பாட்டுக்கு உதவுவது அடிப்படையில் தொழில் நுட்பங்களை அங்கீகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாகவும் தமது பதிவில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்