போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடிகள் - நடிகைகளின் பணப்பரிவர்த்தனைகள் என்ன?

போதைப் பொருள் வழக்கு பரபரப்பை பற்ற வைத்திருக்கும் நிலையில் சுஷாந்தின் காதலியான ரியாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க இயக்குநர்கள் பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.
போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடிகள் - நடிகைகளின் பணப்பரிவர்த்தனைகள் என்ன?
x
ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் மரணத்தால், பற்றிக்கொண்ட நெருப்பு பல மாதங்களாகியும் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. தற்கொலை என ஆரம்பித்த இந்த வழக்கு, இப்போது போதைப் பொருள் பின்னணி தான் காரணம் என்ற புள்ளியில் வந்து மையமிட்டு இருக்கிறது.

சுஷாந்தின் காதலியான ரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

பாலிவுட்டில் தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூரும் இந்த விவகாரத்தில் சிக்கிய நிலையில் அவர்களிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 

இதையடுத்து அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் பண பரிவர்த்தனைகள் என்ன? என்றும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

அதேநேரம் இந்த வழக்கை கையில் எடுத்திருக்கும் சிபிஐ, விசாரணையை தாமதப்படுத்துவது ஏன்? என கேள்வி எழுப்பி, வரும் காந்தி ஜெயந்தியன்று சுஷாந்தின் நண்பரும் நடன இயக்குநருமான கணேஷ் ஹிவார்க்கரும், சுஷாந்தின் முன்னாள் ஊழியருமான அங்கித் ஆச்சார்யாவும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளனர்.

சுஷாந்த் மரணத்தை கொலை வழக்காகவே மாற்றி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கை...

அதேநேரம் இந்த பரபரப்புக்கெல்லாம் காரணகர்த்தாவான ரியாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்கவும் பாலிவுட்டில் போட்டா போட்டி நிலவி வருகிறது. சுஷாந்தின் மரணம் மற்றும் அதுதொடர்பான சர்ச்சைகளில் ரியாவின் பங்கு என்ன? என்பதை வைத்து படமாக்கவும் இயக்குநர்கள் திட்டமிட்டு அதை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்