கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் நிகழ்வும் காரணம் - உள்துறை இணையமைச்சர் தகவல்
பதிவு : செப்டம்பர் 21, 2020, 03:16 PM
பல பேருக்கு கொரோனா பரவியதற்கு டெல்லியில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் நிகழ்வும் ஒரு காரணம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல பேருக்கு கொரோனா பரவியதற்கு டெல்லியில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத்  நிகழ்வும் ஒரு காரணம் என  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பல்வேறு தரப்பினர் வழங்கிய உத்தரவையும் மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும்,  முக கவசம் அணியாமலும் நீண்ட காலம் மூடிய அறைக்குள் நடந்த நிகழ்ச்சி மூலம் பல பேருக்கு  தொற்று ஏற்பட இந்த நிகழ்வும் காரணம் என மாநிலங்களவையில்,  எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில்  உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி  தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.