"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
மருத்துவ படிப்புகளில், தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு  கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்