மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை ஒரு வாரத்துக்குள் வழங்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் ஊதியப் பிடித்தம், தங்கும் வசதி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை டெல்லி, மகாராஷ்டிரம், பஞ்சாப், திரிபுரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் கடைபிடிக்கவில்லை என வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் உறுதி செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என கருத்து தெரிவித்தனர். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கேவி விஸ்வநாதன், தனிமைப்படுத்தப்பட்ட காலத்துக்கான ஊதியத்தை மருத்துவர்களுக்கு வழங்கப்படவில்லை என வாதிட்டார். இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை விடுமுறையாக கருத முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து பதில் அளிப்பதாக தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மருத்துவர்களுக்கு முழு ஊதியத்தை ஒரு வாரத்துக்குள் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்