பேருந்தில் சில்மிஷம் செய்தவருக்கு செருப்படி - சில்மிஷ இளைஞரை துணிச்சலாக எதிர்கொண்ட பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்த போது அவரின் பின்னால் இருந்த ஆண் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பேருந்தில் சில்மிஷம் செய்தவருக்கு செருப்படி - சில்மிஷ இளைஞரை துணிச்சலாக எதிர்கொண்ட பெண் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ
x
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்த போது அவரின் பின்னால் இருந்த ஆண் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அந்த இளைஞரின் சட்டையை பிடித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது மன்னிப்பு கேட்டபடி தப்பிச் செல்ல முயன்ற அவரை விடாமல் பிடித்து செருப்பால் தாக்கினார். தனி ஒரு பெண்ணாக துணிச்சலாக தனக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை தட்டிக் கேட்ட அந்த பெண்ணுக்கு பாராட்டுகள் ஒரு பக்கம் குவிந்து வருகிறது. அந்த இளைஞரை பெண் தாக்கிய காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்