துப்புரவு பணியாளரை இழிவு படுத்திய பெண். வலுக்கும் கண்டனம் - வேகமாக பரவும் வீடியோ

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் இளம்பெண் ஒருவர் துப்புரவுத் தொழிலாளர்களை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துப்புரவு பணியாளரை இழிவு படுத்திய பெண்.  வலுக்கும் கண்டனம் - வேகமாக பரவும் வீடியோ
x
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் இளம்பெண் ஒருவர் துப்புரவுத் தொழிலாளர்களை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் துப்புரவு பணியை முடித்துவிட்டு ஒரு வீட்டை தட்டி குடிக்க தண்ணீர் தாருங்கள் என்று கேட்ட துப்புரவு தொழிலாளர்களை தூரமாக செல்லுங்கள் இல்லை என்றால் எங்களுக்கும் வைரஸ் தொற்று வந்துவிடும் என்று திட்டி விட்டு, தண்ணீரை தூரமாக வைத்து விட்டு செல்கிறார். துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வந்தாலும் பல இடங்களில் அவர்களுக்கு அவமரியாதை வழங்கப்பட்டு வருவது இந்த வீடியோவால் உறுதியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பெண்மணியின் இந்த செயலுக்கு பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்