திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கோரிக்கை ஏற்பு - 13 மாவட்டங்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பி வைப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் தவிக்கும் தங்களுக்கு, லட்டு பிரசாதம் கிடைக்க ஆவன செய்யுங்கள் என ஏராளமான பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஈ மெயில், வாட்ஸ்அப் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் கோரிக்கை ஏற்பு - 13 மாவட்டங்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பி வைப்பு
x
கொரோனா ஊரடங்கு  காலத்தில் ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் தவிக்கும் தங்களுக்கு, லட்டு பிரசாதம் கிடைக்க ஆவன செய்யுங்கள் என ஏராளமான பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஈ மெயில், வாட்ஸ்அப் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பாதி விலையில் இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு லட்டு என்ற அடிப்படையில் விற்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மொத்தமாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தை அணுகி  பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனிடையே, திருப்பதி மலையில் இருந்து 2 லாரிகளில் முதல் கட்டமாக ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களுக்கு  லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்