நாடு முழுவதும் வரும் 25 ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை - விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன
பதிவு : மே 22, 2020, 02:17 PM
மாற்றம் : மே 22, 2020, 02:52 PM
நாடு முழுவதும் வரும் 25 ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
விமான சேவைகள் அனைத்திற்கும் 7 வகையான சிறப்பு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வழக்கமான கட்டணத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையிலிருந்து  2 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்தில்  பெங்களூரு, கோவைக்கு விமானம் மூலம் செல்லலாம். இதேபோல் 2 ஆயிரத்து 500 முதல் 7ஆயிரத்து 500 ரூபாய் வரையிலான விமான கட்டணம் செலுத்தி பயணிகள் ஐதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், கொச்சி, மங்களூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கு செல்ல முடியும். 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்தில் புவனேஸ்வர், கோழிக்கோடு, கோவா, கொச்சி, கொல்கத்தா, நாக்பூர், புனே, ஐதராபாத்  ஆகிய நகரங்களுக்கு விமானம் மூலம் செல்லலாம்.. 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ருபாய் வரையிலான கட்டணத்தில்  இந்தூர், மும்பை,
ராய்பூர், கொல்கத்தா மற்றும் அந்தமானுக்கு விமானத்தில் செல்ல முடியும். இதேபோல் 4 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்தில் டெல்லி, ஜெய்பூர், லக்னோ, மங்களூர், பாட்னா, வாராணசிக்கு செல்லலாம்.  5 ஆயிரத்து 500 முதல் 15ஆயிரத்து 700 ரூபாய் வரையிலான கட்டணத்தில் கவுகாத்தி, வாரணாசி ஆகிய நகரங்களுக்கு செல்ல முடியும்.
விமான பயணிகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  காய்ச்சல், மூச்சு திணறல், இருமல் இருக்கும் பயணிகள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஆன்-லைனில் செக்-இன் செய்து போர்டிங் பாஸை வீட்டில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்றும், விமான நிலையத்தில் டிக்கெட், போர்டிங் பாஸ், அடையாள அட்டை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

1087 views

கர்நாடகாவில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளிகள் - அதிகாரிகள் ஆய்வு

நாடு முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள அநேக கிராமங்களில் மரம், மின்சார கம்பங்களில் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

21 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

13 views

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

12 views

வடமாநில தொழிலாளர்களின் பரிதாப நிலை - நடந்தே ஜார்கண்ட் செல்ல முயற்சி தடுத்து நிறுத்திய போலீசார்

விழுப்புரத்தில் இருந்து நடந்தே ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

10 views

பிற செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கான வன்முறை : ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது - பிரதமர்

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்கள் மீதான வன்முறை, மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.

45 views

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

43 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

399 views

பாய் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து - கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், பாய் தயாரிப்பு தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

16 views

3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த மாணவி - தனது சேமிப்பில் ரூ.48,000 செலவு செய்ததாக மாணவி தகவல்

டெல்லியிலிருந்து 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஜார்க்கண்டிற்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் 12 வயதான சிறுமி.

16 views

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு - குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்

தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.