"ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை" - ரயில்வே வாரியத் தலைவர்

மத்திய அரசு உத்தரவிடும் நிலையில், ரயில்களை இயக்குவது குறித்து உயரதிகாரிகளுடன் ரயில்வே வாரியத் தலைவர் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை - ரயில்வே வாரியத் தலைவர்
x
நாடுமுழுவதும் கொரோனா தொற்று உள்ள பகுதிகளை 3 ஆக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், பச்சை என பிரிக்கப்பட உள்ளதாகவும், இதில் சிவப்பு பகுதியில் உள்ள இடங்களுக்கு போக்குவரத்து தடையை தொடர்ந்து நீட்டிக்கவும், மஞ்சள் நிற வரம்பிற்குள் வரும் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்தை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு உத்தரவிடும் நிலையில், ரயில்களை இயக்குவது குறித்த ரயில்வே வாரியத் தலைவர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில்களை இயக்க அரசு உத்தரவிடும் நிலையில், சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்குவது இல்லை என்றும், இந்த சிறப்பு ரயில்களில் முககவசம் கட்டாயம் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. சமூக இடைவெளி, தெர்மல் சோதனை மற்றும் உணவு விநியோகம் ரத்து ஆகியவை  குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று நடுஇருக்கையை காலியாக விடுவது எனவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசு உத்தரவுப்படியே எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என ரயில்வே வாரிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்