முப்படை தலைமை தளபதியானார் பிபின் ராவத் : 4 ஸ்டார் அந்தஸ்து கொண்ட புதிய பதவி

முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
x
முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில்  முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி என்கிற புதிய பதவியை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் இந்திய ராணுவ தளபதியாக பணியாற்றி கொண்டிருந்தார். முப்படை தலைமை தளபதி என்ற பதவி பெற்றுள்ள இவருக்கு,  நான்கு நட்சத்திர சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்