8 மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற சந்தேக சைக்கோ

முதல் மனைவியை வெட்டி கொன்ற குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கணவன், 2 வது மனைவிக்கு பிறந்த 8 மாத குழந்தையையும் கொடூரமாக அடித்து கொன்றுள்ளான்.
8 மாத குழந்தையை தரையில் அடித்து கொன்ற சந்தேக சைக்கோ
x
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் ராச்சாராம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன புள்ளையா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மனைவி லட்சுமிதேவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை  வெட்டி கொன்றுவிட்டு, 8 ஆண்டுகள் சிறையில் கழித்தார். சிறையில் இருந்து திரும்பிய சின்னப்புள்ளையா, ரமாதேவி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 மாதமே ஆன குழந்தை ஒன்று இருந்தது. இந்த குழந்தை பிறந்த‌து முதல் ரமாதேவி மீது சந்தேகம் கொண்ட சின்னபுள்ளையா அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில், ஆத்திரம் தலைக்கேற காட்டுமிராண்டிதனமாக தன் பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொன்ற சின்னப்புள்ளையா, கத்தியால் மனைவி மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சின்னபுள்ளையாவை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்