"நவ.13-ல் பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி"

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு
நவ.13-ல் பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி
x
பிரிக்ஸ் நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திரமோடி, 2 நாள் பயணமாக வருகிற 13 ம் தேதி, பிரேசில் செல்கிறார். இந்த மாநாட்டில், பிரேசிலுடன் ரஷியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். உறுப்பு நாடுகளுடன் ஒட்டு மொத்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து, இந்த உச்சி மாநாட்டில், தலைவர்கள் விவாதிப்பார்கள். குறிப்பாக, ரஷியா மற்றும் சீன தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, பேச்சு நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்