லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் : எரித்து கொன்ற இளைஞர் கைது

தெலங்கானாவில் லஞ்சம் கேட்ட பெண் தாசில்தாரை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் : எரித்து கொன்ற இளைஞர் கைது
x
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அப்துள்ளப்பூர்மெட் கிராமத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த விஜயா ரெட்டியை, சுரேஷ் என்பவர் தமது நிலப் பிரச்சனை காரணமாக அவரது அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்ய தாசில்தார் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தாம் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி, தாசில்தார் விஜயா ரெட்டி மீது தீ வைத்துள்ளார். விஜயா ரெட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஊழியர்கள் அறைக்குள் வருவதற்குள், அவர் உயிரிழந்தார். அங்கிருந்து தப்ப முயன்ற சுரேஷை, ஊழியர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சுரேஷ்க்கும் லேசான தீக்காயங்கள் இருந்ததால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பத்திரப் பதிவு செய்ய 2 மாதமாக அலைக்கழித்து லஞ்சம் கேட்டதால், எரித்து கொன்றதாக சுரேஷ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்