திகார் சிறையில் ப.சிதம்பரத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திகார் சிறையில் ப.சிதம்பரத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை
x
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் வயிற்று வலிக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு, அவர் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்