மக்கள் நல மருந்தகங்களுக்கான சேமிப்பு கிடங்கு : மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திறந்து வைத்தார்

'பிரதமரின் மக்கள் நல மருந்தகங்கள்' இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இயங்கி வருகின்றன.
மக்கள் நல மருந்தகங்களுக்கான சேமிப்பு கிடங்கு : மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திறந்து வைத்தார்
x
'பிரதமரின் மக்கள் நல மருந்தகங்கள்' இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் 550 மக்கள் நல மருந்தகங்களும், தென் இந்தியாவில் 1800 மக்கள் நல மருந்தகங்களும் இயங்கி வருகின்றன. அதன் மண்டல சேமிப்பு கிடங்கு, கும்மிடிப்பூண்டி அருகே குருத்தானமேடு கிராமத்தில் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை மத்திய  அமைச்சர் சதானந்த கவுடா திறந்து வைத்தார்.  

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர்  விழாவில் கலந்து கொண்டனர்.  இதையடுத்து, கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருந்துகளை ஏற்றி சென்ற லாரியை அமைச்சர் சதானந்த கவுடா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்