நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் - பிரகாஷ் ஜவடேகர்

இந்தியா முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் - பிரகாஷ் ஜவடேகர்
x
நாடு முழுவதும் வரும் 2022 ஆண்டிற்குள் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ வசதி குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்றார். 24 ஆயிரத்து 375 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 

நிலக்கரி சுரங்கம் தொடர்பான நடைமுறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய  அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.  நியூயார்க் நகரில் வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெறும் ஐ.நா.,வின் பருவகால மாநாட்டை 
பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைப்பார் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்