காஷ்மீர் பிரிவினை ஏன் ? : நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் மாநிலத்தை 2 ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காஷ்மீர் பிரிவினை ஏன் ? : நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
x
ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், மாநிலத்தை 2 ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று மசோதா நிறைவேறியது. மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட விவாதம் நடந்து வருகிறது. முடிவில், மக்களவையிலும் இம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த சூழலில், ஜம்மு- காஷ்மீர் பிரிவினை விவகாரத்தில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, நாட்டு மக்களிடம் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி, முடிவு செய்துள்ளார். நாளை, 7 ம் தேதி, தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி, உரையாற்றுவார். 

Next Story

மேலும் செய்திகள்