கேரளாவில் காவல் நிலையத்தில் நிகழும் கைதிகளின் மரணம் தடுத்து நிறுத்த வேண்டும் - பினராயி விஜயன்

கேரளாவில் காவல் நிலையத்தில் நிகழும் கைதிகளின் மரணம் மற்றும் கைதிகள் சித்திரவதை ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் காவல் நிலையத்தில் நிகழும் கைதிகளின் மரணம் தடுத்து நிறுத்த வேண்டும் - பினராயி விஜயன்
x
கேரளாவில் காவல் நிலையத்தில் நிகழும் கைதிகளின் மரணம் மற்றும் கைதிகள் சித்திரவதை, ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருச்சூரில் நடைபெற்ற, பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் நிறைவு விழாவில், கேரள முதலமைச்சருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பேசிய பினராயி விஜயன் எந்த உயர் பதவியில் இருந்தாலும், தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறையில் நடைபெற்ற மரணங்கள் மற்றும் சித்ரவதைகளில், குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்