விபத்தில் பத்திரிகையாளர் உயிரிழந்த விவகாரம் : போதையில் காரை ஓட்டிய கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

மலையாள நாளிதழ் பத்திரிகையாளர் உயிரிழந்த விவகாரத்தில், மதுபோ​தையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
விபத்தில் பத்திரிகையாளர் உயிரிழந்த விவகாரம் : போதையில் காரை ஓட்டிய கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
x
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மலையாள நாளிதழ் செய்தியாளர் பஷீர் பலியானார். இந்த விபத்தில் அந்த காரை ஓட்டிய நபர் போ​தையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர், அம்மாநில நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறையின் இயக்குநர் ஸ்ரீராம் வெங்கட்ராமன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. காரை அவருடைய தோழி ஓட்டியதாக ஸ்ரீராம் தெரிவித்த நிலையில், போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். இதனிடையே, ஸ்ரீராமின் தோழி வபா பிரோஸ், போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் ஸ்ரீராம் போதையில் காரை ஓட்டியது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன், ஸ்ரீராமின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், விபத்தில் பலியான பஷீரின் சடலத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இச்சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்