கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம் - லே, லடாக்கில் ராணுவத்தினர் நடத்தும் டி20 கிரிக்கெட் தொடர்

கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில் காஷ்மீர் மாநிலம் லே மற்றும் லடாக் பகுதியில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம் - லே, லடாக்கில் ராணுவத்தினர் நடத்தும் டி20 கிரிக்கெட் தொடர்
x
கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில், காஷ்மீர் மாநிலம் லே மற்றும் லடாக் பகுதியில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில்,  லே மற்றும் லடாக் பகுதியில் நடத்தப்படும் இந்தப் போட்டியில், ராணுவத்தில் இருந்து 3 அணிகளும், லே பகுதியில் உள்ள இந்திய விமான படை அணி, இந்தோ திபெத்திய பாதுகாப்பு படை அணி,  உள்ளூர் அணி ஒன்று ஆகிய 6 அணிகள் மோதுகின்றன.இறுதி போட்டி, ஜூலை 9ஆம் தேதி நடத்தப்படுகிறது. பரிசுகள் பிரம்மாண்டமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.​ தேசப் பற்றை வளர்க்கவும், உள்ளூர் மக்களின் நெருக்கம் ஏற்படவும் இந்தப் போட்டி வழிவகுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்