சித்தூர் குடிபாலா கிராமத்தில் பல்வேறு அலங்காரங்களுடன் காளை மாட்டுக்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் குடிபாலா கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளை பூஜை நடைபெற்றது.
சித்தூர் குடிபாலா கிராமத்தில் பல்வேறு அலங்காரங்களுடன் காளை மாட்டுக்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
ஆந்திர மாநிலம் சித்தூர் குடிபாலா கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளை பூஜை நடைபெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கான காளை மாடுகள் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு கோவிலுக்கு அழைத்துவரப்பட்டன.இதை தொடர்ந்து பெண்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் காளை மாடுகளின் காலில் விழுந்து வணங்குகின்றனர். மாட்டுக்கு தாம்பூலம் கொடுக்கும் பெண் பக்தர்கள், வேண்டும் வரம் கேட்கின்றனர். தாம்பூலத்தை காளை ஏற்றுகொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.இந்த வினோத விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்