" நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் " - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், வலிமையான அரசாக, மத்திய அரசு இருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
 நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்  - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
x
நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும், வலிமையான அரசாக, மத்திய அரசு இருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். 

புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகமயமாக்கல் குறித்து நிலவும் பல கருத்துகளையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றார். சர்வதேச வர்த்தக வலைபின்னல்கள், திறமைகளை பகிர்ந்து கொள்வது, சந்தைகளை பயன்படுத்துவது என எல்லாவற்றிலும் நிலவும் கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். பொருளாதார மாற்றங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதற்கு ஏற்ப வெளியுறவு கொள்கைகளின் பங்களிப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச ஒப்பந்தங்கள், தொழில்நுட்பங்கள் இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்றும், இந்தியாவுக்கு வெளியிலும் தொழில்வளர்ச்சியில் இந்தியாவின் செயல்பாடு இருக்கும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் தேசியவாத கண்ணோட்டம் வளர்ந்து வருவதாகவும், அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு தேசிய கண்ணோட்டம் முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நீண்ட காலமாக தொடரும் சர்வதேச பொருளாதார நிலைபாடுகள் மாற்றியமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். எனிலும் அடுத்த 20 ஆண்டுகளில் சர்வதேச பொருளாதார மாற்றங்களில் இந்தியாவின் நிலை மதிப்பு மிக்கதாக  இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஒரு வாரத்துக்குள் பல அமைச்சரவை கூட்டங்கள், துறை வாரியாக கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும்,  வெளியுறவு துறை அமைச்சராக பதவி ஏற்ற  ஒருவாரத்தில், தனது அமைச்சகத்தில் செலவிட்ட நேரம்போல,  நிதியமைச்சர்,  வர்த்தக அமைச்சர்களுடன் நேரம் செலவிட்டிருப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். தெற்காசிய அளவில் இந்தியா முக்கிய பொருளாதார நாடாக உள்ளதால், இந்தியாவுக்கு அதிக பொறுப்பு இருப்பதாகவும், அருகாமை  நாடுகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

சார்க் அமைப்பு சார்ந்து இயங்குவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், அதில் தீவிரவாததை தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். வங்காள விரிகுடா நாடுகளின் அமைப்பான பிம்ஸ்டிக் நாடுகளின் கவனம் செலுத்துவோம் என்றும், இந்த நாடுகள் இந்தியாவின் கருத்துகள்,  வாய்ப்புகளுக்கு ஏற்ற நாடுகளாக உள்ளன என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்