கான்பூர் கிடங்கில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பலர் தவிப்பு
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கோபத்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கோபத்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள கட்டடங்களுக்கும் தீ பரவியது. இதில் 5 குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட பலர் சிக்கி கொண்டனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருடன் இணைந்து தீயில் சிக்கியவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
Next Story