7-ம் கட்ட வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
7-ம் கட்ட வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
x
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்கம், சண்டிகர், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் நீண்ட வரிசைகளில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்றைய தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ்திவாரி உள்ளிட்ட 918  வேட்பாளர் களத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்