போஃபர்ஸ் ஊழல் : மீண்டும் விசாரிக்க அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றது சிபிஐ...

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க, அனுமதி கோரி, டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சிபிஐ திரும்பப் பெற்றது.
போஃபர்ஸ் ஊழல் : மீண்டும் விசாரிக்க அனுமதி கோரிய மனுவை திரும்ப பெற்றது சிபிஐ...
x
போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் சிபிஐயின், குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2005ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. மாறாக வழக்கறிஞர் அகர்வால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீடு செய்ய சிபிஐக்கு இருந்த கால அவகாசம் ஆன 90 நாட்களுக்குள் சிபிஐ மேல்முறையீடு செய்யாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் தங்களுக்கு போதிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் எனவே இந்த bofors வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்